உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / ராணுவ வீரர் எனக்கூறி மோசடி செய்தவர் கைது

ராணுவ வீரர் எனக்கூறி மோசடி செய்தவர் கைது

நாகர்கோவில்:ராணுவ வீரர் எனக்கூறி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்ட ஆங்கிலோ இந்தியன் கைது செய்யப்பட்டார்.சென்னை போரூர் முகலிவாக்கம் ஏ.ஜி.காலனியைச் சேர்ந்தவர் ஜோனி 50. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே புண்ணியம் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்ல நிர்வாகியிடம் ராணுவ வீரர் என்பதால் மிலிட்டரி கேன்டீனில் இருந்து பொருட்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.43 ஆயிரத்து 500 மோசடி செய்தார்.இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீஸ் விசாரணையில் மார்த்தாண்டத்தில் ஒரு லாட்ஜில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கடையிலிருந்து சிம் கார்டு வாங்கி அதை பயன்படுத்தி பல்வேறு ஆசிரமங்கள், கிறிஸ்தவ மடங்களுக்கு சென்று சுமார் ரூ.2 லட்சம் வரை மோசடி செய்ததும் தெரியவந்தது. சென்னையில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவரை சென்னை போலீசில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை