உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மதுபோதையில் சிகரெட் பிடித்தவர் கருகி பலி

மதுபோதையில் சிகரெட் பிடித்தவர் கருகி பலி

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் உச்சிகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தாணுமுருகன் 44. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சில நாட்களுக்கு முன் முருகன் சிகரெட்டை வாயில் வைத்த படி தரையில் படுத்து கிடந்தார். சிகரெட்டை சரியாக அணைக்காமல் போட்டதில் அவர் உடுத்திருந்த லுங்கியில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் கால் முழுவதும் கருகியது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். வடசேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை