குழந்தையை காட்ட மறுத்த தலைமையாசிரியருக்கு பளார்
நாகர்கோவில்; பள்ளிக்கு வந்த தாயிடம் குழந்தையை காட்ட மறுத்ததால் தலைமை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த தாயார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோடு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் ஜான் கிறிஸ்டோபர். இவர் பள்ளியில் இருந்த போது 26 வயது மதிக்கத்தக்க பெண் பள்ளி அலுவலகத்தில் வந்து ஒரு மாணவியின் பெயரை கூறி அது தனது மகள் என்றும் அவரை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.குழந்தையின் தந்தை பள்ளியில் சேர்க்கும்போது தன்னைத்தவிர வேறு யார் வந்தாலும் குழந்தையை பார்க்க அனுமதிக்க கூடாது என பதிவு செய்திருந்தார். இதனால் குழந்தையை காண்பிக்க தலைமையாசிரியர் மறுத்தார். இதில் அந்தப் பெண்ணுக்கும் தலைமை ஆசிரியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பெண் தலைமையாசிரியர் கன்னத்தில் அறைந்தார்.ஜான் கிறிஸ்டோபர் புகாரில் போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.