உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி /  தந்தை எரித்து கொலை மகனுக்கு போலீஸ் வலை

 தந்தை எரித்து கொலை மகனுக்கு போலீஸ் வலை

நாகர்கோவில்: சொத்து தகராறில், படுக்கையில் கிடந்த தந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற மகனை போலீசார் தேடுகின்றனர். குமரி மாவட்டம், பளுகல் அருகே இடைக்கோடு முள்ளுவிளையை சேர்ந்த கூலித்தொழிலாளி சிகாமணி, 70. இவருக்கு மனைவி மற்றும் நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில், மகன் சுனில் குமார், 37, என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சிகாமணியின் இடது கால் அகற்றப்பட்டது. மனைவி அவரிடம் இருந்து பிரிந்து சென்றார். இதனால் தனியாக ஒரு அறை அமைத்து, அங்கு சிகாமணியை தங்க வைத்து மகன்கள் பராமரித்து வந்தனர். சில நாட்களுக்கு முன் இரவு, 8:00 மணியளவில் சிகாமணிக்கும், சுனில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. வீட்டுக்குள் சென்ற சுனில் குமார் பெயின்ட் கலக்க பயன்படுத்தும் டர்பன் திரவத்தை சிகாமணி மீது ஊற்றி தீ வைத்து தப்பினார். கால் இல்லாத நிலையில் ஓட முடியாமல் அவர் அலறினார். படுகாயங்களுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இறந்தார். சுனில்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அருமனை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை