உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி /  ஆம்னி பஸ்சில் மயக்க பிஸ்கட் கொடுத்து மாணவி பலாத்காரம்: டிரைவர் கைது

 ஆம்னி பஸ்சில் மயக்க பிஸ்கட் கொடுத்து மாணவி பலாத்காரம்: டிரைவர் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணத்தின் போது தாயிடம் பரிவாகப் பேசி மகளை தனியாக பயணம் செய்ய வைத்து மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆம்னி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான பெண் கோவையில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்சி., இறுதி ஆண்டு படித்து வருகிறார். நான்கு மாதங்களுக்கு முன் இவர் தாயுடன் ஆம்னி பஸ்சில் சென்றார். பஸ்சில் களியக்காவிளையைச் சேர்ந்த அனிஷ் 36, டிரைவராக பணிபுரிந்தார். தாய், மகளிடம் பாசமாக பேசி எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் என்றார். பின் தாயிடம் நீங்கள் எதற்கு வீணாக அலைகிறீர்கள்? மகள் வரும் போது சொல்லுங்கள் அவளை பத்திரமாக கல்லூரியில் விட்டு விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். அதை நம்பி தாயும் மாணவியை அனீஷ் டிரைவராக வரும் பஸ்சில் தனியாக அனுப்பினார். கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி மாணவி தனியாக கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த போது, பசிக்கும்போது சாப்பிடு என்றுகூறி பிஸ்கட் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட மாணவி மயக்கம் அடைந்துள்ளார். மறுநாள் காலையில் பஸ் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் வந்த போது மாணவியிடம் டிரைவர் அனீஷ், நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது என அதிர்ச்சி கொடுத்துள்ளார். பின் தான் அவர் கொடுத்தது மயக்க பிஸ்கட் என்பது தெரிய வந்தது. இதை யாரிடமாவது கூறினால் தாயையும், உன்னையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியதால் மாணவி மவுனமாக இருந்து விட்டார். பின் இதை சொல்லியே இரு முறை வெளியிடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை வீடியோ எடுத்து வைத்திருந்த அனீஷ், பின் அதை காட்டி மிரட்டத் தொடங்கியதால் தாயிடம் மாணவி விஷயத்தை கூறினார். மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அனீஷை கைது செய்தனர். அனீஷுக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை