உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள் படகுப் போக்குவரத்து நேரம் அதிகரிப்பு

குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள் படகுப் போக்குவரத்து நேரம் அதிகரிப்பு

நாகர்கோவில்:கோடை விடுமுறையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் படகு போக்குவரத்து ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.குமரிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகளும் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்ல விரும்புகின்றனர். தற்போது விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் அதன் வழியாக பயணம் செய்யவும் ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால் படகில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பதற்கான கியூ எப்போதும் நீண்டு காணப்படுகிறது. எனவே நேற்று முதல் படகு போக்குவரத்து ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 8:00 மணிக்கு பதிலாக காலை 7:00 மணிக்கே தொடங்கப்படுகிறது. 6:45 மணி முதல் கவுண்டர்களில் டிக்கெட் வழங்கப்படுகிறது. ஜூன் முதல் தேதி வரை இது அமலில் இருக்கும். பயண நேரம் அதிகரிக்கப்பட்டதை சென்னை பூம்புகார் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்) தியாகராஜன் நேற்று காலை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை