| ADDED : நவ 15, 2025 01:29 AM
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே டூ - வீலர் மீது லாரி உரசியதில் இரு வாலிபர்கள் பலியாகினர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தேரேகால் புதுார் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் தினேஷ், 25. இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், 25. இருவரும் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் டூ - வீலரில் மார்க்கெட் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றனர். டீ குடித்து விட்டு புறப்பட்ட போது, அவ்வழியாக வந்த லாரி டூ - வீலரில் உரசியது. இதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்த போது, லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.