உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / ஜோதிடரை கொலை செய்த பெண் உட்பட இருவர் கைது

ஜோதிடரை கொலை செய்த பெண் உட்பட இருவர் கைது

நாகர்கோவில்:ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே கீழப்பெருவிளை இசக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் 64. ஜோதிடர். மனைவி விஜயகுமாரி. மகன், மகள் வெளியூரில் உள்ளனர்.ஜன.8ல் வீட்டில் தனியாக இருந்த ஜான் ஸ்டீபன் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரித்தனர். இரணியல் அருகே கட்டி மாங்கோட்டை சேர்ந்த கலையரசி 43, கூலிப்படையாக செயல்பட்ட திருநெல்வேலி மாவட்டம் வேலங்குளத்தைச் சேர்ந்த நம்பிராஜன் 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.கலையரசி கணவனை பிரிந்து வாழ்கிறார். கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக ஜோதிடம் பார்க்க ஜான் ஸ்டீபனிடம் வந்துள்ளார். அவர் சில பரிகாரங்கள் செய்தால் கணவருடன் சேர்ந்து வாழலாம் என கூறி பெரும் தொகை வாங்கியுள்ளார்.ஆனால் அதன் பின்னரும் கணவன் மனைவிக்கிடையே பிரச்னை அதிகரித்தது. இதனை ஜான் ஸ்டீபனிடம் தெரிவித்த கலையரசி தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நம்பிராஜன் உதவியுடன் அவரை தீர்த்து கட்டி உள்ளார் என போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை