உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / 7 மாத குழந்தையுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை; அலைபேசியால் ஏற்பட்ட விபரீதம்

7 மாத குழந்தையுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை; அலைபேசியால் ஏற்பட்ட விபரீதம்

நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அதிக நேரம் அலைபேசியை பார்த்ததை கண்டித்ததால் ஏழு மாத குழந்தையுடன் இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தக்கலை அருகே சரல்விளையைச் சேர்ந்தவர் ஷர்மிளா 26. இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த காலித் என்பவருடன் 2003ல் திருமணம் நடந்தது. ஏழு மாத பெண் குழந்தை ஹைரா உள்ளது. காலித் தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் ஷர்மிளா தாயார் வீட்டில் வசித்து வந்தார். மேலும் இவர் குழந்தையை சரிவர கவனிக்காமல் எப்போதும் அலைபேசியை பார்த்துக்கொண்டிருப்பாராம். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். சம்பவத்தன்று அலைபேசி பார்த்ததை தாயார் கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய ஷர்மிளா குழந்தையுடன் குளத்தில் குதித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் குளத்தில் குதித்து இருவரையும் மீட்டனர். ஆனால் அவர்கள் இறந்திருந்தனர். தக்கலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை