மேலும் செய்திகள்
யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபார சாதனை
20-May-2025
கரூர், மே 20கரூர், பரணி பார்க் பள்ளி மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.பள்ளி மாணவர் தாணுமாலயன், பிளஸ் 1 வகுப்பில் கலை பாடப்பிரிவில், 590 மதிப்பெண்கள் பெற்று, கரூர் மாவட்டத்தில் முதலிடமும், மாணவி சாதனா, 588 மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்தில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர். இலக்கியா, அர்ச்சனா ஆகியோர் தலா, 585 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணினி அறிவியலில், இரண்டு பேரும், கணிதம், கணக்குப்பதிவியல், பொருளியல், வணிக கணிதம் பாடங்களில் தலா, ஒருவர் என ஆறு பேர், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 590க்கு மேல் ஒருவரும், 580க்கு மேல் நான்கு பேரும், 550க்கு மேல், 17 பேரும், 500க்கு மேல், 81 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.அதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 19 மாணவர்கள், 480க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவி இலக்கியா, 492, புகழ் ஹர்சினி, ஹர்சினி ஆகிய இருவரும் தலா, 490, அபிநயா, ஸ்ரீமதி ஆகியோர் தலா, 489 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் ஐந்து பேர், அறிவியலில் மூவர், சமூக அறிவியலில் ஒருவர் தலா, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 490க்கு மேல் மூன்று பேர், 480க்கு மேல், 19 பேர், 470க்கு மேல், 42 பேர், 450 க்கு மேல், 77 பேர், 400க்கு மேல், 140 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், 10 மற்றும் பிளஸ் 1 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர், உறுதுணையாக இருந்த முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியம், பள்ளி முதல்வர் சேகர், துணை முதல்வர் நவீன்குமார், மேல்நிலை ஒருங்கிணைப்பாளர்கள் பானுப்பிரியா, கணேசன் ஆகியோருக்கு, பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகன ரங்கன் பரிசு வழங்கினார்.பள்ளி செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி உடனிருந்தனர்.
20-May-2025