மேலும் செய்திகள்
காலியாகிறது தடுப்பணை இருக்கிறீங்களா, ஆபீசர்ஸ்!
27-Dec-2024
பெ.ஆ.,கோவில் தடுப்பணையில் செடி, கொடிகளை அகற்ற எதிர்பார்ப்புகரூர், :கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்.,ல், பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கடந்த, அ.தி.மு.க., ஆட்சி யில் தடுப்பணை கட்டப்பட் டது. அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், தடுப்பணையில் தேக்கி வைக்கப்படுகிறது.இதனால், ஆண்டாங்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த, இரண்டு மாதங்களாக அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழை காரணமாக வரும் தண்ணீர், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.தற்போது, தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகளில், மழை காரணமாக அதிகளவில் செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதனால், நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளின் கோரிக்கைபடி, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில், முளைத்துள்ள செடி, கொடிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
27-Dec-2024