மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி
20-Nov-2024
அரவக்குறிச்சி, டிச. 18-சின்னதாராபுரத்தில், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சின்ன தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் போலீசார் சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியரும், மாநில நல்லாசிரியர் விருது பெற்றவருமான ராமசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணி, 3 கி.மீ., துாரம் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தியவாறு சென்றது.போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய, பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டு, 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பேரணியாக சென்றனர். ஆசிரியர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
20-Nov-2024