மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிநுாற்றாண்டு விழா ஆலோசனை
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிநுாற்றாண்டு விழா ஆலோசனைகரூர்,: கரூர், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நுாற்றாண்டு விழா நடத்த ஆலோசனை கூட்டம் நடந்தது.முன்னாள் மாணவர் சிவராமன் தலைமை வகித்தார். தமிழகத்தில், 2,238 அரசு பள்ளிகள், 100 ஆண்டுகளை கடந்துள்ளன. அதில், மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம், 37 அரசு பள்ளிகளிலும் நுாற்றாண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அதன்பின், 100 ஆண்டுகளை கடந்த இதர பள்ளிகளிலும் நுாற்றாண்டு நிகழ்வை ஆண்டு விழாவுடன் சேர்த்து கொண்டாட வேண்டும். பள்ளிகளில் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக நுாற்றாண்டு விழா நடத்தப்படும். விழாக் குழு வாயிலாக முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், கல்வி அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியை சார்ந்த அனைவருக்கும் நுாற்றாண்டு விழா குறித்து தெரியப்படுத்த வேண்டும்.தற்போது பணிபுரியும் மற்றும் முன்னாள் ஆசிரியர்களை கவுரவிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த திட்டமிட வேண்டும். இதற்காக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி கலந்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில், பள்ளி முதல்வர் ரேவதி, தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரி தமிழ் பேராசிரியர் ராஜன், நாட்டு நலப்பணி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.