உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவலாளி அடித்து கொலைவட மாநில வாலிபர் கைது

காவலாளி அடித்து கொலைவட மாநில வாலிபர் கைது

காவலாளி அடித்து கொலைவட மாநில வாலிபர் கைதுகரூர்:கரூர் அருகே, காவலாளியை அடித்து கொன்ற, வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 71; இவர், ஈரோடு சாலை, சரவணா நகரில் உள்ள சிமென்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில், காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த, அசாம் மாநிலம் பீகுபார் பகுதியை சேர்ந்த கவுதம் என்பவரது மகன் சாகர் குமார், 20; என்பவருக்கும், நேற்று அதிகாலை தகராறு ஏற்பட்டது.அப்போது, குடிபோதையில் இருந்த சாகர் குமார், இரும்பு சுத்தியால் பழனியப்பனை அடித்து கொலை செய்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார், சாகர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை