மேலும் செய்திகள்
மழைநீர் வடிகாலில் ரசாயனக்கழிவு; மக்கள் அதிருப்தி
14-Feb-2025
கரூர் வடிவேல் நகரில் வடிகால்கால்வாய் அமைக்க கோரிக்கைகரூர்,:கரூர், வடிவேல் நகரில் முறையாக வடிகால் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர், ஈரோடு சாலையில் வடிவேல் நகரில் ஏராளமான வணிக நிறுவனங்கள், திருமண மண்டபம், வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஈரோடு சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் வழியாக செல்கிறது. இங்கு, வடிகால் கால்வாய் தொடர்ந்து இல்லாததால், கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கரூர் வடிவேல் நகர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மழைநீர், கழிவு நீர், ஈரோடு சாலையில் உள்ள வடிகால் கால்வாய் வழியாக வெளியேறி வருகிறது. இங்கு, தொடர்ச்சியாக கால்வாய் கட்டப்படாமல் உள்ளது. சாலையில் மற்றொரு புறம் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்த போது, மழைநீர் வடிகால் கால்வாய், மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது என்கின்றனர். மாநில நெடுஞ்சாலை அலுவலகத்தில், பல முறை மனு அளித்தும், விடுபட்ட இடங்களில் கால்வாய் கட்டப்படாமல் உள்ளது. மழை பெய்யும் போதும், வீடுகளில் கழிவுநீர் புகுந்து விடுகிறது. பெரும்பாலான நாட்களில் துர்நாற்றம் வீசுகிறது. முறையாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
14-Feb-2025