மேலும் செய்திகள்
இன்ஸ்பயர் விருதுக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
11-Mar-2025
இன்ஸ்பயர் மானக் போட்டிஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி சாதனைகரூர்:புத்தாக்க அறிவியல் போட்டி (இன்ஸ்பயர் மானக்) போட்டியில், ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, மத்திய அரசு மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்துறை இணைந்து நடத்தும், புத்தாக்க அறிவியல் போட்டி (இன்ஸ்பயர் மானக்) 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சமூகத்திற்கு பயன்படக்கூடிய சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் நடந்த இன்ஸ்பயர் மானக்-2024 போட்டியில், கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் இருத்து, இரண்டு சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் ராஜசேகரன் வழிகாட்டுதலில், 9ம் வகுப்பு மாணவர் சுர்ஜித் கண்டுபிடிப்பான, நவீன புத்தகப்பை மற்றும் 10ம் வகுப்பு மாணவி அர்த்திகா கண்டுபிடிப்பான சூரிய ஒளி சக்தியில் இயங்கக்கூடிய மீள் நிரப்பு கருவி ஆகிய இரண்டு கண்டுபிடிப்புகள் தேர்வாகியுள்ளன.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி, வழிகாட்டி ஆசிரியர் ஆகியோரை பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, தாளாளர் அசோக் சங்கர், செயலாளர் ஆனந்த் சங்கர், பள்ளி முதல்வர் காமேஷ்வர ராவ் ஆகியோர் பாராட்டினர்.
11-Mar-2025