மேலும் செய்திகள்
அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
23-Jan-2025
தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிஅரவக்குறிச்சி, :அரவக்குறிச்சி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில், தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, கரூர் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை பிரிவு அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி, பேரூராட்சி அலுவலகம் வரை சென்று திரும்பியது. அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி தொடங்கி வைத்தார்.இரு சக்கர வாகனத்தில் செல்வோரிடம் தலைக்கவசம் அணிய வேண்டும், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் வருவோரிடம் சீட் பெல்ட் அணிய வேண்டும், சாலையில் சென்ற பொதுமக்களிடம் போக்குவரத்து சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பன போன்ற துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் சாலை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலக பணியாளர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
23-Jan-2025