அரசு புறம்போக்கு நிலத்தில்வெடி வைத்து கற்கள் வெட்டல்
அரசு புறம்போக்கு நிலத்தில்வெடி வைத்து கற்கள் வெட்டல்ஓசூர் தொரப்பள்ளி அடுத்த கொல்லப்பள்ளி கிராம மக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:கொல்லப்பள்ளி கிராமத்தில் அரசின் புறம்போக்கு நிலம், 3 ஏக்கர் உள்ளது. அந்த இடத்தை சுற்றி, 22 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் கற்களை வெட்டி எடுப்பதால், அதன் துகள்கள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதோடு, விவசாய நிலத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக, ஓசூர் சப்-கலெக்டருக்கு கடந்த நவ., 6ல் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இன்றளவும் கற்கள் வெடி வைத்து வெட்டி எடுப்பதால், கடந்த, 3 மாதங்களாக விவசாயம் செய்ய முடியாமல், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அரசு புறம்போக்கு நிலத்தில் வெடி வைத்து கற்களை வெட்டி எடுப்பதை, மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.