உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம்

கரூரில் பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம்

கரூரில் பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம்கரூர்:கரூரில், பா.ம.க., செயற்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.அதில் வரும், 23ல் கும்பகோணத்தில் நடக்கவுள்ள சமய சமுதாய நல்லிணக்க சோழ மண்டல மாநாட்டுக்கு, கரூர் மாவட்டத்தில் இருந்து, 100 வாகனங்களில், 5,000 பேர் பங்கேற்பது, கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும். கரூர் புதிய பஸ் ஸ்டாண்டை, மதுரை புறவழிச்சாலையில் அமைக்க வேண்டும், தான்தோன்றி மலை பகுதியில், ஒரு நாள் விட்டு, ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும், கோயம்பள்ளி - மேலப்பாளையம் இடையே அமராவதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள, பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளில், செயலாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் மணி, மாவட்ட தலைவர் தமிழ்மணி, துணை செயலர் முத்து கிருஷ்ணன், சமூக நீதி பேரவை செயலர் செல்வராஜ், நகர செயலர் ராக்கி முருகேஷன், வன்னியர் சங்க தலைவர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ