உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையான அட்டை சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையான அட்டை சிறப்பு முகாம்

குளித்தலை: குளித்தலை, அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று மாற்றுத்-திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்-கான சிறப்பு முகாம் நடைபெற்றது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். 28 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்-டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ சான்றிதழ் வழங்கினர். பின், தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. காது, மூக்கு, தொண்டை மருத்துவர் நித்தியா, எலும்பு முறிவு மருத்துவர் திவாகர், மனநல மருத்-துவர் வீராசாமி, மாற்றுத்திறனாளிகள் செயல்திறன் உதவியாளர் ராகவன் மற்றும் பேச்சு பயிற்றுனர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் கூறுகையில்,'' தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம், பிரதி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையிலும், ஒவ்வொரு திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலு-வலகத்திலும், வாரம்தோறும் புதன் கிழமை கரூர் பழைய அரசு தலைமை மருத்துவமனையிலும் நடைபெறுகிறது. இந்த வாய்பை மாற்றுத்திறனாளிள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rangan
செப் 11, 2024 06:56

It is sheer waste of public money. No useful purpose has been served by issuing such card. Railways are not accepting the card and insisting on production of their own I'd card to avail travel concession. Similarly, Income Tax Department is insisting on submission of Form 10A1 while submitting Income Tax return every year to avail tax concession under section 80U. It is better for Government of India to issue instructions to all Departments including State Government to accept the National I'd card for differently abled persons which has been issued with nature and percentage of disability. Will the Government act before wasting public money?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை