உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே கோவிலை திறக்க விடாமல் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர் அருகே கோவிலை திறக்க விடாமல் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர்: கரூர் அருகே, நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரி-வித்து, கோவிலை திறக்க விடாமல், பொதுமக்கள் படியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில், பட்டா உள்ள காலி இடங்கள், வீட்டுமனை-களை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வெண்ணைமலையில் உள்ள ஐயப்பன் கோவில், தனியார் வங்கி அலுவலகம் உள்பட, ஏழு இடங்களை கையகப்படுத்தும் வகையில், நேற்று முன்தினம் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்-டது.இதுகுறித்து, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோவில் அலு-வலகத்தில், நேற்று மாலை ஹிந்து சமய அறநிலையத்துறை அதி-காரிகளுடன், பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்-போது, நிலம் கையகப்படுத்த, கால அவகாசம் கேட்டு ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையாளரிடம் முறையிட்டு இருப்ப-தாக பொதுமக்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, கரூர் ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி காந்தன், கோரிக்கை மனு எழுதி, அலுவல-கத்தில் தருமாறு கூறி விட்டு புறப்பட்டார். இதனால், அதிர்ச்சிய-டைந்த பொதுமக்கள், உதவி ஆணையர் ரமணி காந்தனை அலுவ-லகத்தில் இருந்து செல்ல விடாமல் தடுத்தனர். மேலும், பாலசுப்-பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டுகளில் பொதுமக்கள் அமர்ந்து, நிலம் கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கூறி, காத்தி-ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, சஷ்டி பூஜைக்காக நேற்று மாலை, 5:00 மணிக்கு அர்ச்சகர்கள் கோவில் நடையை திறக்க சென்றனர்.அப்போது கோவிலை திறக்கவிடாமல் பொதுமக்கள், படிக்கட்டு-களில் அமர்ந்து கொண்டு நிலத்தை கையகப்படுத்த கூடாது என கோஷமிட்டனர். இதனால், அர்ச்சகர்கள் கோவிலை திறக்காமல் திரும்பி சென்றனர். அதேபோல் கோவிலுக்கு வந்த பக்தர்களும், சுவாமியை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். காத்-திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், வீடுகளுக்கு செல்லாமல் கோவில் வளாகத்தில், இரவு உணவை சமைக்க ஏற்-பாடுகளை செய்தனர். இதையடுத்து, கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்-வராஜ் தலைமையில், 25 க்கும் மேற்பட்ட போலீசார், வெண்ணை மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், பாது-காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை