வேலாயுதம்பாளையம் அருகேமலைத்தேனீக்கள் அகற்றம்
வேலாயுதம்பாளையம் அருகேமலைத்தேனீக்கள் அகற்றம்கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, மலைத்தேனீக்களை, தீயணைப்பு துறை வீரர்கள் அகற்றினர்.கரூர் மாவட்டம், என்.புதுார் துவரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 50; விவசாயி. இவரது தென்னந்தோப்பில், ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. விவசாய தோட்டத் தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு மலைத்தேனீக்கள் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால், மலைத் தேனீக்களை அப்புறப்படுத்த, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, தீயணைப்பு துறை வீரர்கள், மலைத்தேனீக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அப்புறப்படுத்தினர்.