உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்கரூர்:தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், தி.மு.க., கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், புற ஆதார ஊழியர்களுக்கு பணி நிரந்தம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், மேல்நிலை தொட்டி இயக்கும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், நிலையான ஊதியம், பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் சென்னமராஜ், மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் தனபால், மகளிர் அணி அமைப்பாளர்கள் ரேவதி, சுஜித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி