சாக்கடையில் கழிவுநீர் தேக்கம்துர்நாற்றத்தால் மக்கள் அவதி
சாக்கடையில் கழிவுநீர் தேக்கம்துர்நாற்றத்தால் மக்கள் அவதி குளித்தலை:குளித்தலை நகராட்சி எட்டாவது வார்டு, பள்ளிவாசல் மெயின் ரோட்டில் உள்ள சாக்கடையில், கழிவுநீர் செல்லாமல் பிளாஸ்டிக் பேப்பர் , குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கழிவுநீரில் உள்ள குப்பையை அப்புறப்படுத்தி, கொசு மருந்து அடிக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும். சண்முகானந்தா தியேட்டர் அருகில் உள்ள, பழுதான பாலத்தின் வழியாக செல்லும் இடத்தில், சிலர் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கின்றனர். அப்பகுதி முழுவதும் குப்பை குவிந்துள்ளது. துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, சாக்கடையில் உள்ள கழிவுநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என, வார்டு கவுன்சிலர் ஷகிலா பானு நகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.