மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரம் பகுதியில்சாரல் மழை பொழிவு
04-Apr-2025
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மாம்பழம் சீசன் துவக்கம்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதிகளில், மாம்பழம் சீசன் துவங்கியது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மகாதான புரம், மாயனுார், கிருஷ்ணராயபுரம், சேங்கல், திருக்காம்புலியூர், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மா சாகுபடி செய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், மரங்களிலேயே பழங்கள் பழுத்து வருகின்றன. இந்த பழங்களை, வியாபாரிகளிடம் மொத்த விலைக்கு, விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.கரூர் - திருச்சி நெடுஞ்சாலை அருகில், மாந்தோப்புகளில் இயற்கை முறையில், மாம்பழம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. செந்துாரம் மாம்பழம் கிலோ, 70 ரூபாய், பங்கனபள்ளி, 130, இமாம்பசந், 200, அல்போன்சா, 100, நீலம் மாம்பழம் கிலோ, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சீசன் துவக்கம் காரணமாக, வியாபாரிகள் மா விற்பனையை துவக்கியுள்ளனர். மேலும் இந்த பகுதி மாம்பழங்கள் சுவையாக இருப்பதால், வாகனங்களில் ஊர்களுக்கு செல்வோர் வாங்கி செல்கின்றனர்.
04-Apr-2025