மேலும் செய்திகள்
சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
10-Apr-2025
சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணிகரூர்:கரூர் மாவட்ட சமரச மையம் சார்பில், சமரச நாளையொட்டி, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணியை, மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம், கலெக்டர் தங்கவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணியில் பங்கேற்ற, கரூர் அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர் சமரச நாள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். பேரணி அரசு கலைக்கல்லுாரியில் நிறைவு பெற்றது. பேரணியில், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல், குடும்ப நல நீதிபதி எழில், நீதிபதிகள் ஜெயப்பிரகாஷ், வேடியப்பன், சார்பு நீதிபதி பிரியங்கா, சமரச மைய ஒருங்கிணைப்பாளர் அனுராதா உள்பட பலர் பங்கேற்றனர்.* குளித்தலையில். நீதிமன்ற சார்பு நீதிபதி முத்துசாமி தலைமை வகித்து, பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெடுஞ்சாலைத்துறை வழியாக, குளித்தலை பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும் நீதிமன்றம் வந்தடைந்தது.பள்ளி மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டு, சமரசம் மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் ரகசியம் காக்கப்படும். அது உங்கள் வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்காது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். மாவட்ட உரிமையில் நீதிபதி தமிழரசி, நீதிபதிகள் பிரகதீஸ்வரன், சசிகலா, யுகாதிமரியா மற்றும் வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது, செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
10-Apr-2025