உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிழற்கூடம் இல்லாத வாங்கல்அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்

நிழற்கூடம் இல்லாத வாங்கல்அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்

நிழற்கூடம் இல்லாத வாங்கல்அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்கரூர்:கரூர் அருகே, வாங்கல் அக்ரஹாரத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்காததால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் அவதிப்படுகின்றனர்.கரூர்- - நாமக்கல் மாவட்டம், மோகனுார் சாலையில் வாங்கல் அக்ரஹாரம் உள்ளது. அந்த பகுதியில் கோவில்கள், கால்நடை மருத்துவமனை, வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் வீடுகள் உள்ளன. நாமக்கல், மோகனுார் மற்றும் திருச்சி மாவட்டம் காட்டு புத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல, வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும். அதே போல், கரூர் நகர பகுதிகளுக்கு செல்வோரும் இங்குள்ள பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர்.ஆனால், வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்பின், இரண்டு பகுதிகளிலும் நிழற்கூடம் இல்லாததால், கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை