குளித்தலை நகராட்சி கூட்டம்: 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
குளித்தலை நகராட்சி கூட்டம்: 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்குளித்தலை: குளித்தலை நகராட்சி கூட்டரங்கத்தில், நேற்று அவசர கூட்டம் தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கணேசன், கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி மேலாளர் தேவராஜன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:தி.மு.க., கவுன்சிலர் சக்திவேல்: கூட்டத்தில் பொது விவாதத்திற்கு வைக்கப்படும் பொருள்கள் குறித்து, அனைத்து கவுன்சிலர்கள் அரசின் கொள்கை முடிவுகளை தவிர, மற்ற பொருள்கள் தெரிவிக்கப்பட்டு, கூட்டத்தில் வைக்க வேண்டும்.தலைவர் சகுந்தலா: சப்ஜெக்ட் நான் பார்த்து வைப்பது; நகராட்சி முழுவதும் நம் ஊரு, நம் மக்கள் என பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இனிவரும் கூட்டங்களில் சரி செய்யப்படும்.தி.மு.க., கவுன்சிலர் சக்திவேல்: உழவர் சந்தை பகுதியில் உள்ள தார்ச்சாலை தரமற்ற வகையில் போடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. பணி ஒப்பந்ததாரருக்கு இதற்குரிய தொகையை விடுவிக்கக் கூடாது.கமிஷனர் நந்தகுமார், தலைவர் சகுந்தலா: சாலைகுறித்து புகார் வந்தது. சாலை ஆய்வு செய்யப்பட்டது. மீண்டும் சரி செய்யப்பட்டு, பணம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., கவுன்சிலர் பிச்சை: அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இக்கூட்டத்தில், 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.