தெரு விளக்குகள் பழுதுபொதுமக்கள் அவஸ்தை
தெரு விளக்குகள் பழுதுபொதுமக்கள் அவஸ்தைகிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட வார்டுகளில், பஞ்., நிர்வாகம் மூலம் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளில் பழுது ஏற்பட்டால், அதனை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் சீரமைத்து வந்தனர். சில மாதத்துக்கு முன், பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பதவிக்காலம் முடிந்தது. இதனால் பஞ்., நிர்வாகம், யூனியன் ஆபீஸ் நிர்வாகத்தின் கீழ் நடந்து வருகிறது.இதன் காரணமாக, மக்களுக்கு தேவையான குடிநீர், பழுதான தெரு விளக்குகளை சரி செய்வது போன்ற கோரிக்கைள் நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. தற்போது, பிள்ளபாளையம் தெற்கு பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவில் அந்த வழியாக செல்லும் மக்கள், அவஸ்தைக்குள்ளாகின்றனர். எனவே, பஞ்சாயத்து நிர்வாகம், தெரு விளக்குகளை பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.