உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் வான் நோக்கு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் வான் நோக்கு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் வான் நோக்கு நிகழ்ச்சிஅரவக்குறிச்சி:கரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க பிரசார உபகுழு சார்பில், கரூர் மாவட்ட செயலாளர் ஜான் பாஷா வழிகாட்டுதல்படி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வான் நோக்கு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தலைமை வகித்தார். முதன்முறையாக பள்ளியில் டெலஸ்கோப் கொண்டு மாணவர்களுக்கு வானியல் அறிவு ஏற்படுத்தப்பட்டது. சூரியன் மறைந்ததும், மற்ற கோள்களின் நிலைகள் பற்றியும், டெலஸ்கோப் பற்றியும் மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் சரவணன் விளக்கி கூறினார். மேலும், மூளை சார்ந்த விளையாட்டுகளை பிரகலாவதி நடத்தினார். பெற்றோர்களின் அலைபேசியில், 'ஸ்கை வியூலைட் ஆப்' நிறுவி தரப்பட்டது. அறிவியல் பட்டதாரி ஆசிரியை ராபியா பஸ்ரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !