மேலும் செய்திகள்
வரதராய சுவாமி கோவில்தேரோட்ட திருவிழா
10-Mar-2025
வரதராஜ பெருமாள் கோவில்கும்பாபிஷேக விழாகுளித்தலை:குளித்தலை அடுத்த, ராஜேந்திரத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபி ேஷ விழா நேற்று நடந்தது.கடந்த, 17ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தை, பட்டாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை செய்தனர். நேற்று காலை ஆறாம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், பட்டாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தை மேளதாளங்கள் முழங்க, ஊர்வலமாக கொண்டு சென்று கலசத்திற்கு புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின், மூலவருக்கும் புனித நீர் ஊற்றப்பட்ட பின், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சித்ரா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
10-Mar-2025