உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அகிலாண்டபுரத்தில் நிழற்கூடம்சீரமைக்க மக்கள் கோரிக்கை

அகிலாண்டபுரத்தில் நிழற்கூடம்சீரமைக்க மக்கள் கோரிக்கை

அகிலாண்டபுரத்தில் நிழற்கூடம்சீரமைக்க மக்கள் கோரிக்கைகரூர்:க.பரமத்தி, சூடாமணி அருகில் அகிலாண்டபுரத்தில், ராஜபுரம் பிரிவு செல்லும் நெடுஞ்சாலையில் பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது. இப்பகுதி கிராம மக்கள், மாணவ, மாணவியர் நாள்தோறும், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இங்குள்ள பஸ் ஸ்டாப்பை பயன் படுத்துகின்றனர்.இங்குள்ள நிழற்கூடம் பராமரிக்காமல் விட்டதால் சிதிலமடைந்து விட்டது. இதனை சீரமைக்க வேண்டி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மக்கள் நிற்க இடமின்றி அவதிப்படுகின்றனர்.விரைவில் நிழற்கூடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை