உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவருக்கு மிரட்டல்மனைவி மீது வழக்கு

கணவருக்கு மிரட்டல்மனைவி மீது வழக்கு

கணவருக்கு மிரட்டல்மனைவி மீது வழக்குகுளித்தலை:குளித்தலை அடுத்த எழுதியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய், 37; கூலித்தொழிலாளி. இவரது மனைவி நித்தியா, 33; தம்பதிக்கு இடையே கருத்துவேறுபாடால், கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. கடந்த பிப்., 12 மதியம், 12:00 மணிக்கு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். பின், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை, மணவாசி டோல்கேட் அருகே, மனைவி நித்தியா, உறவினர் கவிதா, 35, ஆகிய இருவரும், விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து விஜய் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் நித்தியா, கவிதா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை