உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ராயனுாரில் குளிர்பதன கிடங்குவிவசாயிகளுக்கு அழைப்பு

ராயனுாரில் குளிர்பதன கிடங்குவிவசாயிகளுக்கு அழைப்பு

ராயனுாரில் குளிர்பதன கிடங்குவிவசாயிகளுக்கு அழைப்புகரூர்:கரூர், கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர் ராயனுாரில் உள்ள, ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில், 25 மெ.டன் குளிர்பதன கிடங்கு உள்ளது. இதில், பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள் போன்ற வேளாண் விளை பொருள்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி கொள்ளலாம். குளிர்பதன கிடங்கிக்கு மாத வாடகையாக, 6,191 ரூபாய் (வரி தனி) மற்றும் குளிர்பதன கிடங்கிற்கான மின் கட்டணம் பயனாளி செலுத்த வேண்டும். மேலும் ஆறு மாதத்துக்கான வாடகையை முன் பணமாக செயலாளர், விற்பனை குழு, திருச்சிராப்பள்ளி என்ற விலாசத்துக்கு செலுத்த வேண்டும். விபரங்களுக்கு ddab.gmail.com என்ற இ.மெயில், வேளாண்மை துணை இயக்குனர், (வேளாண் வணிகம்), ராயனுார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ