உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பருவமழை முன்னேற்பாடு நெடுஞ்சாலைத்துறை ஒத்திகை

பருவமழை முன்னேற்பாடு நெடுஞ்சாலைத்துறை ஒத்திகை

அரவக்குறிச்சி, பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.அரவக்குறிச்சியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தியதின்படி, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட அலுவலகங்களில் மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரம், மரம் வெட்டும் இயந்திரம், தளவாட கருவிகள், தார் மற்றும் ஜல்லிக்கற்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நேற்று ஒத்திகை நிகழ்வு நடந்தது, இதில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கர்ணன், உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !