உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணம் கேட்டு தாக்குதல் 3 வாலிபர்கள் கைது

பணம் கேட்டு தாக்குதல் 3 வாலிபர்கள் கைது

குளித்தலை : குளித்தலை, சின்னஆண்டாள் தெருவை சேர்ந்-தவர் தமிழ்ச்செல்வன், 24; எலக்ட்ரிகல் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த, 19 இரவு, 9:45 மணியளவில், வேலைக்கு சென்றுவிட்டு, வீட்-டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பள்-ளிவாசல் அருகே தென்கரை பாசன வாய்க்கால் நடைபாலத்தில் பாரதி நகரை சேர்ந்த கரன், 22, ஸ்ரீகாந்த் தேவா, 23, குணால், 21, ஆகிய மூவரும் சேர்ந்து, தமிழ்ச்செல்வனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு தாக்கினர். வாலிபரின் சத்தம் கேட்டு அங்கு மக்கள் திரண்டதால், அந்த மூன்று வாலிபர்களும் தப்பி ஓடினர். தமிழ்ச்-செல்வன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை