மேலும் செய்திகள்
தப்பாட்ட கலைஞர் தண்ணீரில் மூழ்கி பலி
15-Aug-2024
குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த நெய்தலுார் பஞ்., சின்ன களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்பென்டர் முருகேசன். இவரின் மகன் தர்ஷித், ௨; அதே பகுதியை சேர்ந்த அபிலன் மகன் மகிழன். இருவரும் நேற்று காலை, 11:00 மணியளவில் தெருவில் விளையாடினர். அப்போது சைக்கிளை தள்ளிக்கொண்டு, ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் அருகில் உள்ள சிறு தொட்டி அருகே விளையாடினர். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீட்டுக்கு திரும்பாததால், பெற்றோர் தேடினர்.அப்போது சிறிய தொட்டி அருகில் மகிழன் மட்டும் நின்று கொண்டிருந்தான். தர்ஷித் எங்கே என்று கேட்டபோது, தொட்டியை காட்டியுள்ளான். ஐந்து அடி ஆழ சிமென்ட் தொட்டியில் தவறி விழுந்திருக்கலாம் என்பதால், தொட்டிக்கு தண்ணீர் பாய்ச்சும் மோட்டாரை நிறுத்தி தேடினர்.குழந்தையை காணாத நிலையில், முசிறி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்தனர். மக்கள், பொக்லைன் உதவியுடன், 1 கி.மீ., துாரத்துக்கு தண்ணீர் செல்லும் குழாயை, எட்டு இடங்களில் உடைத்து பார்த்ததில், 300வது மீட்டரில் குழாய்க்குள் தர்ஷித் இறந்து கிடந்தான். சடலத்தை மீட்ட குளித்தலை போலீசார், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
15-Aug-2024