உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் வசதி இல்லை பயனற்ற நிலையில் உள்ள குழாய்கள்

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் வசதி இல்லை பயனற்ற நிலையில் உள்ள குழாய்கள்

கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில் போதிய தண்ணீர் வசதி இல்லா-ததால், ரயிலுக்கு தண்ணீர் நிரப்ப அமைக்கப்பட்ட குழாய்கள் பய-னற்ற நிலையில் உள்ளன.கரூர் வழியாக நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள், நாட்டின் பல பகுதிகளுக்கு செல்கிறது. ஆயிரக்கணக்கான பய-ணிகள் கரூரில் இருந்து, பயணம் செய்கின்றனர். கடந்த, 2 முதல் மதுரையில் இருந்து, கரூர் வழியாக கர்நாடகா மாநிலம், பெங்க-ளூருவுக்கு வந்தே பாரத் ரயிலும் இயக்கப்படுகிறது. பல ஆண்டு-களாக, கரூர் வழியாக டீசல் இன்ஜின் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது, ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சிக்கும், திண்டுக்கல்லுக்கும், கரூர்--சேலம் ரயில்வே வழித்தடத்திலும் மின் பாதை அமைக்கப்பட்-டுள்ளது.இந்நிலையில், கரூரில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்க-ளுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என வர்த்தகர்கள், ரயில் பய-ணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், ரயில்வே ஸ்டேஷனில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், கரூரில் இருந்து ரயில்களை இயக்குவது தாமதமாகி வருகிறது. ஆனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் அறை, தங்கும் வசதி உள்-ளிட்ட அடிப்படை வசதிகள் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. அப்-போது, ரயிலுக்கு தண்ணீர் ஏற்ற வசதியாக, முதலாவது பிளாட் பாரத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டது. ஆனால் குழாய்கள் தற்-போது பயனற்ற நிலையில் உள்ளது.இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது: கரூரில் ஜவுளி, கொசு-வலை மற்றும் பஸ் பாடி கட்டும் தொழில் வளர்ச்சியடைந்துள்-ளது. இருப்பினும் சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல, மற்ற நகரங்களில் இருந்து இயக்கப்படும் ரயிலை நம்பி, கரூர் மாவட்ட பயணிகள் உள்ளனர். குறிப்பாக, சென்னைக்கு கூட கரூரில் இருந்து ரயில் இயக்கப்படுவது இல்லை. நாள்-தோறும் இரவு, 8:00 மணிக்கு வரும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயி-லிலும், 9:00 மணிக்கு வரும் பாலக்கோடு எக்ஸ்பிரஸ் ரயிலிலும் சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளது.பகல் நேரத்தில் சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால், ஈரோடு, திருச்சி மற்றும் சேலம் போய் ரயிலை பிடிக்க வேண்டும். கரூரில் இருந்து ரயில்களை இயக்க, போதிய தண்ணீர் வசதி இல்லை என, அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர். காவிரி மற்றும் அமராவதி ஆறுகளுக்கு இடையில் கரூர் நகரம் உள்ளது. ஏதா-வது, ஒரு ஆற்றுப்பகுதியில் இருந்து, தனியாக குழாய் அமைத்து தாராளமாக தண்ணீர் கொண்டு வர முடியும்.குறிப்பாக, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள, வாங்கல் காவிரியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ