உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மூதாட்டிக்கு கொலை மிரட்டல் பெண் மீது வழக்கு பதிவு

மூதாட்டிக்கு கொலை மிரட்டல் பெண் மீது வழக்கு பதிவு

குளித்தலை, குளித்தலை அடுத்து கீரனுார் பஞ்., அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரம்மாள், 60, கூலித் தொழிலாளி. இதே ஊரை சேர்ந்தவர் வெள்ளையம்மாள், 45. இருவருக்கும் இடையே நிலப் பிரச்னை சம்பந்தமாக முன் விரோதம் உள்ளது. கடந்த, 7 ம்தேதி வீரம்மாள் வீட்டிற்கு சென்ற வெள்ளையம்மாள் அவரை தாக்கி, தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட வீரம்மாள், தோகைமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.இது குறித்து வீரம்மாள் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வெள்ளையம்மாள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி