உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தமிழ்ச்செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்ச்செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு

கரூர்,: தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான தமிழ்ச்-செம்மல் விருதுக்கு, கரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வ-லர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு https://tamilvalarchithurai.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெற்று கொள்ளலாம். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், கரூர் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடம், கரூர் என்ற முகவரிக்கு ஆக., 9க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை