உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடவூரில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு

கடவூரில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு

குளித்தலை, ஆக. 29-குளித்தலை அடுத்த, முள்ளிப்பாடி பஞ்., சேர்வைக்காரன்பட்டியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று முன்தினம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், முள்ளிப்பாடி பஞ்., தலைவர் நீலா வேல்முருகன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை