உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுரங்கப்பாதையில் கழிவு மண் தேக்கத்தால் மக்கள் அவதி

சுரங்கப்பாதையில் கழிவு மண் தேக்கத்தால் மக்கள் அவதி

கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை, ரயில்வே கேட் சுரங்கப்பாதையில் கழிவு மண் தேங்கி வருவதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டையில் ரயில்வே கேட் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை வழியாக, லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் வரை வாகனங்களில் மக்கள் செல்கின்றனர். சுரங்கப்பாதையில் மழை நீர் மற்றும் வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது பாதையில் தண்ணீர் தேங்கும்.அப்போது கழிவு மண் அதிகமாக தேங்குகிறது. தற்போது லாலாப்பேட்டை சுரங்கப்பாதையில், கழிவு மண் தேங்கி வருவதால் வாகனங்களில் செல்லும் போது வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே,சுரங்கப்பாதையில் தேங்கி வரும் கழிவு மண்ணை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்