கரூரில் 263 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கல்
கரூரில் 263 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கல்கரூர்:தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், 263 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.கரூர் தனியார் பள்ளியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்து பேசியதாவது:தமிழகத்தில், பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், பல்வேறு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் மாநில அளவில், 2.65 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.முகாமில், 141 முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில், 263 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 196 பேரை வேலையளிக்கும் நிறுவனங்கள் தேர்வு செய்து வைத்துள்ளன.இவ்வாறு பேசினார்.தொடர்ந்து அரவக்குறிச்சி அருகில், நாகம்பள்ளியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 2.12 கோடி ரூபாய் மதிப்பில், கட்டப்பட்ட புறக்கடை கோழியின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், கலெக் டர் தங்கவேல், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.