உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாலவிடுதியில் மறியல் 27 பேர் மீது வழக்குப்பதிவு

பாலவிடுதியில் மறியல் 27 பேர் மீது வழக்குப்பதிவு

குளித்தலை:குளித்தலை அடுத்த மாவத்துார் அரசு குளத்தில், நேற்று முன்தினம், டாரஸ் டிப்பர் லாரியில் செம்மண், வண்டல் மண் கடத்தி சென்றனர். தகவலறிந்த யூனியன் கவுன்சிலர் ராமமூர்த்தி, மாவத்துார் பஞ்., தலைவர் செந்தில் மோகன் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் பிடித்து கொடுத்த வாகனங்களை போலீசார் விடுவித்தனர்.இதையறிந்த யூனியன் கவுன்சிலர் ராமமூர்த்தி, பஞ்., தலைவர் செந்தில் மோகன் மற்றும் கிராம மக்கள், நேற்று முன்தினம் இரவு பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரிக்கை விடுத்தும் கலைந்து செல்லாததால், போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக, யூனியன் கவுன்சிலர் ராமமூர்த்தி, பஞ்., தலைவர் செந்தில் மோகன் உள்பட, 25 பேர் மீது பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ