உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேங்காம்பட்டி பஞ்.,ல் ஆதார் சிறப்பு முகாம்

வேங்காம்பட்டி பஞ்.,ல் ஆதார் சிறப்பு முகாம்

கிருஷ்ணராயபுரம்:வேங்காம்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில், ஆதார் பதிவு சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து வேங்காம்பட்டி அலுவலக வளாகத்தில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடந்தது. இதில் கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டுகளில் வசிப்பவர்களுக்கு, ஆதார் பதிவு செய்யப்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் மற்றும் ஆதார் திருத்தம் ஆகிய சேவைகள் தபால்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆதார் பதிவு செய்து கொண்டனர். ஏற்பாடுகளை பஞ்சாயத்து நிர்வாகம், தபால்துறை இணைந்து செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி