உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துாய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம்: வி.ஐ.டி., பல்கலை- திறப்பு

துாய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம்: வி.ஐ.டி., பல்கலை- திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வி.ஐ.டி., பல்கலையில் துாய்மையான சுற்றுச்சூழலுக்கான மையத்தை, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்துாதர் கிறிஸ் ஹோட்ஜஸ் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வி.ஐ.டி., நிறுவனர் வேந்தர் ஜி. விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமெரிக்க துணைத் துாதர் கிறிஸ் ஹோட்ஜஸ் பேசியது:சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம் வி.ஐ.டி., பல்கலையுடன் நீண்ட நெடிய உறவை கொண்டுள்ளது. கல்வியை கட்டியெழுப்புவது மட்டுமல்ல, உறவை வலுப்படுத்தும் பணியை துவங்கியுள்ளோம். பல்வேறு நல்ல செயல்களை செய்வதற்கு எங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு.அமெரிக்க- -- இந்தியஉறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் நாம் வெற்றிபெற போகிறோம். நாம் எவ்வாறு கல்வி கற்கிறோம், எப்படி ஆராய்ச்சி செய்கிறோம் என்பது முக்கியம். சமூக அறிவியல், இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல், கட்டடக்கலை மற்றும் இயந்திர பொறியியல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.வி.ஐ.டி., வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகையில், ''அமெரிக்காவில் உள்ள பல்கலை கழகங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.வெளிநாட்டில் உயர்கல்விக்கான இறுதி இலக்கு அமெரிக்கா. 20ம் நுாற்றாண்டுக்கு பின் உலக அளவில் உயர்கல்வி என்றால், அமெரிக்கா என்ற நிலை உருவாகியுள்ளது. ஐ.நா., சபை ஏற்றுக்கொண்ட உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் தொடர்புபடுத்த துாய்மையான சுற்றுச்சூழலுக்கான மையம் துவக்கப்பட்டுள்ளது.உள்ளூர் முதல் உலக அளவில் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிவதில் இந்த மையம் கவனம் செலுத்தும்,'' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

krishnan s
மே 05, 2024 10:47

It is good to think about improving the environment with technology but how will this solve the mega environmental disaster with all sorts of missiles flying all over one of the culprit is America supplying defence equipments to all and sundry as this is major income to keep their economy floating.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை