சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்
கரூர்;கரூர் மாவட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசகுமார் தலைமையில், தாலுகா அலுவலக வளாகத்தில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை (சி.பி.எஸ்.,) ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அரசு ஊழியர்கள் சங்க தலைவர் தனலட்சுமி, துணை செயலாளர் குப்புசாமி, பொருளாளர் சிங்கராயர் உள்பட பலர் பங்கேற்றனர்.