உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளப்பட்டியில் இன்று தர்ஹா சந்தனக்கூடு விழா

பள்ளப்பட்டியில் இன்று தர்ஹா சந்தனக்கூடு விழா

கரூர்: அரவக்குறிச்சி அருகே உள்ள, பள்ளப்பட்டியில் காட்டுப்பள்ளி தர்ஹா சந்தனக்கூடு உருஸ் விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று, (27ம் தேதி) நடக்கிறது. காலை 10:00 மணிக்கு பள்ளப்பட்டி சுக்கான்குழிதெருவில்உள்ள முஹையதீன்ஆண்டவர்தர்பார்ஷரீபில்இருந்து, சந்தனக்குடம்ஊர்வலமாக புறப்பட்டு காட்டுப்பள்ளி தர்ஹாவுக்கு சென்று, ரல்லா ஷரீபுக்கு சந்தனம்பூசுதல்நடக்கும். மதியம், 12:00 மணிக்கு கந்துாரி சாப்பாடு வினியோகம் செய்யப்படும். மாலை 5:00 மணிக்கு கொடி இறக்கப்படும். விழா ஏற்பாடுகளை தர்ஹா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை