உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை விரிவுப்படுத்தும் பணி அதிகாரிகள் நேரடி ஆய்வு

சாலை விரிவுப்படுத்தும் பணி அதிகாரிகள் நேரடி ஆய்வு

கிருஷ்ணராயபுரம்: மைலம்பட்டி ஜங்ஷன் சாலையை, விரிவுப்படுத்துவதற்கான ஆய்வு பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட மைலம்பட்டி, பாளையம், தோகைமலை நெடுஞ்சாலை செல்கிறது. இதில் மைலம்பட்டி ஜங்ஷன் பகுதியை, விரிவுப்படுத்துவதற்கான ஆய்வு பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். மைலம்பட்டி ஜங்ஷன் பகுதியில் உள்ள சாலை வரைபடம், இருபுறமும் உள்ள சாலை அகலம், நீளம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.சென்னை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், திருப்பூர் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் முருகபூபதி, கரூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் ரவிக்குமார், உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தகுமார், மாயனுார் உதவி பொறியாளர் அசருதீன் ஆகியோர் கொண்ட குழுவினர் மைலம்பட்டி பகுதியில் கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ