உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கனவு இல்லம் திட்ட ஆணை வழங்கும் விழா

கனவு இல்லம் திட்ட ஆணை வழங்கும் விழா

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் கிழக்கு யூனியனுக்குட்பட்ட பஞ்சாயத்து பகு-திகளில் உள்ள பயனாளிகளுக்கு, 'கலைஞர் கனவு இல்லம்' திட்-டத்துக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்தார். இதில், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்-துக்குட்பட்ட, 13 பஞ்சாயத்துகளில் உள்ள, 26 பயனாளிகளுக்கு, 'கனவு இல்லம்' ஆணை உத்தரவு வழங்கப்பட்டது. மேலும், 20 பயனாளிகளுக்கு, தொகுப்பு வீடு பழுது பார்ப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. சேர்மன் சுமித்திரா தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, பொறியாளர் சிவக்குமார், தி.மு.க., செய-லளாளர் கதிரவன், தெற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை